சிகிச்சைக்கு வருபவரிடம் எதுவும் கேட்காமல் நோயை கண்டுபிடிப்பவரே மிக சிறந்த அக்குபஞ்சர் மருத்துவர் . .

Tuesday, January 5, 2016

Sunday, July 6, 2014


அக்குபஞ்சர் மற்றும் பிற மாற்று மருத்துவ முறைகளை கற்று சிகிச்சை செய்து வரும் மருத்துவ நண்பர்களுக்கு வணக்கங்கள் ,

                நோய்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் மக்கள் ஆங்கில மருத்துவ முறையை கைவிட்டு மாற்று மருத்துவ முறைகளை நோக்கி வர துவங்கி உள்ளார்கள்.  ஆனால் நம்மில் எத்தனை மருத்துவர்கள் அந்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி உள்ளோம் என்பது கேள்விக்குறியே ? ஏனென்றால் பல அக்குபஞ்சர் மருத்துவர்கள் ஆரம்பத்தில் கற்றதை தவிர , மேற்கொண்டு தங்களின் நுணுக்கங்களை மேம்படுத்தி கொள்ளாமல் செயல்படுவதால் நாம் எதிர்பார்த்த அளவு பலன்கள் கிடைப்பதில்லை.  
              சில நோயாளிகளுக்கு பல்வேறு அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்வு செய்து சிகிச்சை செய்தும் குணமாவது இல்லை . இன்னும் சிலருக்கு குணமாவது போல் இருந்தாலும் ஒரு சில நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ நோய் திரும்ப வந்து விடுகிறது . இது எதனால்? இதுவே இன்று அக்குபஞ்சர் மருத்துவர்களின் பெரும் சந்தேகமாக உள்ளது . இதற்கு காரணம் நாம் நோயின் அடிப்படையான காரணத்தை கண்டறிய தவறிவிட்டோம் என்பதே உண்மை. அக்குபஞ்சரில் நாம் பயன்படுத்தும் புள்ளிகளுக்குசரியான காரணமும் விளக்கமும் தெரியவேண்டும். அப்படி இல்லாமல் பல்வேறு புத்தகங்களில் யாரோ கொடுத்து இருக்கும் புள்ளிகளை பயன்படுத்துவதால் முழுமையான குணம் கிடைக்காது. ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை உடையவன். அவனுடைய நோயிற்கான காரணமும் வேறுபடும். இந்த நிலையில் இந்த வியாதிக்கு இந்த புள்ளி என்று குறிப்பிட்ட புள்ளிகளை பயன்படுத்துவது நாம் செய்யும் முதல் தவறு. ஒவ்வொருவருக்கும் நாடி பரிசோதனை செய்து நாம் சுயமாக புள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். அக்குபஞ்சரில் நோயிற்கான காரணத்தை எவ்வாறு துல்லியமாக கண்டறிவது மற்றும் எந்த புள்ளிகளை பயன்படுத்துவது என்பது மிக முக்கியமாகும்.இந்த பயிற்சியில் அக்குபஞ்சரின் வித்தியாசமான அணுகுமுறை மற்றும் நுணுக்கமான வகையில் புள்ளிகளை தேர்வு செய்வது எப்படி என்பதை தெளிவாக கற்று கொள்ளலாம். இந்த பயிற்சிக்கு பின்னர் நோயாளிகளை நாடி பரிசோதனை செய்யும்போது நோயிற்கான காரணம் தெளிவாக தெரிய வரும்.
          நான் கடந்த 16 வருடங்களாக அக்குபஞ்சர் மருத்துவம் செய்து வருகிறேன். முதலில் ஆரம்ப காலங்களில் அகுபஞ்சரை மட்டும் கற்று சிகிச்சை தரும் பொழுது கிடைத்த வெற்றியை விட,   பிற்காலங்களில் ரெய்கி , அக்குபிரசர், வர்மம் போன்றவைகளை கற்று அவைகளை  அகுபஞ்சருடன் இணைத்து சிகிச்சை செய்த பின் கிடைத்த வெற்றிகளே  அதிகம் .  ஏனென்றால் இந்த சிகிச்சை முறைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை . ஒரு அக்குபஞ்சர் மருத்துவருக்கு ரெய்கி , மற்றும் வர்மம் தெரிந்துருப்பது மிக சிறந்த முறையில் குனபடுத்த உதவும் .
              இந்த சிறப்பு பயிற்சியானது ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் நடைபெறுகிறது. பயிற்சி நடைபெறும் நாட்கள் மற்றும் இடம் குறித்து தெரிந்து கொள்ள கீழ்கண்ட செல்பேசி  எண்ணில்  தொடர்பு கொள்ளவும்.
S.செந்தில்குமார்
ACUPUNCTURE RESEARCH ACADEMY
THIRUVARUR.
CELL : 9842380877

பயிற்சி வகுப்பில் உங்களுக்கு திருப்தி இல்லையெனில் பயிற்சியின் இறுதி நாளில் பயிற்சி தொகையை நீங்கள் முழுவதுமாக திரும்ப பெற்றுகொள்ளலாம்.

நாடி பரிசோதனையை சரியாக / முறையாக செய்யாமல் சிகிச்சை அளிப்பது , கண் தெரியாதவன் ஓவியம் வரைவதற்கு சமம்.

Saturday, July 5, 2014

அக்குபஞ்சர் மருத்துவ நண்பர்களே ,         

          அக்குபஞ்சர் மருத்துவமானது மிக சிறப்பாக குணப்படுத்த கூடியது  என்றாலும் , அது மக்களிடையே இன்னும் சரியான அளவில் சென்று அடையவில்லை என்பதே உண்மை . இதற்கு காரணம் அக்குபஞ்சர் மருத்துவத்தை சரியான முறையில் கற்று அறியாமலும்   அதன் உண்மையான தத்துவங்களை புரிந்துகொள்ளமலும்  செயல்படுவதுமே ஆகும். அக்குபஞ்சர் சிகிச்சையில் ஒரே ஒரு ஊசியை கொண்டு, ஒரு நோயாளியின் உடலில் தோன்றி உள்ள அணைத்து விதமான அறிகுறிகளையும் நீக்கி விட முடியும் . ஏன் என்றால் நோய் என்பது ஒன்றுதான் . அது பல்வேறு அறிகுறிகளை காண்பிக்கும். நாம் அறிகுறிகளை நீக்க வேண்டும் என்று எவ்வளவுதான் போராடினாலும் அது நீங்காது. சில நேரங்களில் குணமாவது போல் தெரியும் . அடுத்த சில நாட்களில் திரும்ப வந்துவிடும். ஏன் என்றால் உடலில் தோன்றி உள்ள அடிப்படையான நோய் இன்னும் உள்ளது. அது எவ்வளவு நாள் ஆனாலும் அறிகுறிகளை திரும்ப திரும்ப தோற்றுவிக்கும் . எனவே நாடி பரிசோதனையின் மூலமாக நோயின் மூல காரணத்தை கண்டு பிடித்து அதை சரி செய்ய வேண்டும்.


இதற்கு கீழ் கண்டவற்றில் நாம் தெளிவாக வேண்டும் .

முதலில் நாடி பரிசோதனையில் எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறியவேண்டும் .
இரண்டவது அந்த உறுப்பின் இயக்கத்தை எந்த உறுப்பின் இயக்கம் பாதிக்கிறது என்பதை கண்டறிய வேண்டும் .
மூன்றாவது அந்த பாதிப்பை சரி செய்யும் புள்ளி எது என்பதை கண்டு பிடிக்க வேண்டும் .
நான்காவது அந்த புள்ளியை எதற்காக தேர்வு செய்தோம் என்பதில் நமக்கு தெளிவு வேண்டும் .
ஐந்தாவது அந்த புள்ளி நோயை எவ்வாறு சரி செய்கிறது என்பதில் தெளிவு வேண்டும்.
ஆறாவது அந்த புள்ளிக்கும் நோயிற்கும் உள்ள தொடர்பு என்ன என்பது தெரிய வேண்டும் .
ஏழாவது அந்த புள்ளி குணமாக்கும் என்பதில் நமக்கு தீவிரமான உறுதி வேண்டும்.
மேற்கண்டவாறு செயல்படும் போது மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் .

அக்கு பஞ்சரில் வெற்றிகரமாக குணமாக்க வேறு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது.

இன்னும் சிலர் அக்குபஞ்சர் என்ற போர்வையில் மறைந்து கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

வேறு சிலர் அகுபஞ்சரை சரியாக விளங்கி கொள்ளாமல், அதன் தத்துவங்களை புரிந்து கொள்ளாமல் சிகிச்சை செய்வதால், அக்குபஞ்சர் சரியாக செயல்படாது என்ற ஒரு  எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டனர். எனவே அக்குபஞ்சர் மருத்துவர்கள் பின்பற்றவேண்டியவைகளை எனக்கு தெரிந்த வரையில் கொடுத்து இருக்கிறேன். இதை பின்பற்றினால் நாமும் வளரலாம். அக்குபஞ்சர் மருத்துவமும் வளரும். 

 1. நாடி பரிசோதனையை காலையில் மட்டுமே செய்ய வேண்டும் .
2. நாடி பரிசோதனையை வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல்     மட்டுமே செய்ய   வேண்டும் 
3. அதிகமான ஊசிகளை  பயன்படுத்த வேண்டாம். 
 4. மருந்து மாத்திரைகளை  படிப்படியாக நிறுத்த சொல்ல வேண்டும்.
 5. ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்களுக்கு பின்னர்தான் அடுத்த சிகிச்சை  தர வேண்டும்.
6. stimulator  போன்ற எலக்ட்ரோனிக் சாதனங்களை பயன்படுத்தவேண்டாம் . 
7. பிறரால் பரிந்துரை செய்ய பட்ட சிகிச்சை குறிப்புகளை அதிகம் பயன்படுத்த  வேண்டம் .
8. நாடிகளின் தன்மையை பொருத்து சுயமாக புள்ளிகளை தேர்வு செய்யவும்.
9. சில குறிப்பிட்ட சுவைகளை குறைக்க சொல்லவும் .
         
 இறுதியாக ,                           
உங்களின் மீதும் , உங்கள் சிகிச்சையின் மீதும் நம்பிக்கை வையுங்கள் .
இயற்கையின் விதியை நம்புங்கள் .
சிகிச்சை வெற்றி பெற்றால் உடனே  பெருமை கொள்ளவேண்டாம் .
அது நமது முன்னேற்த்தை தடை செய்து  விடும்.


உங்களின் சந்தேகங்களை எனது ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் .

உங்களுக்கு பதில் அனுப்பப்படும் .
மேலும் இந்த வலை பக்கத்திலும் அது  பிரசுரிக்கப்படும் .
மற்றவர்களுக்கும்  பயன்படும்.

எனது ஈமெயில் முகவரி ,

senthilkumar.acuhealer@Gmail.com                
                                           Mobile No :  9842380877     


அக்குபஞ்சரில்  நாம் எந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் ஊசிகளை பயன்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு நோயாளியின் நோயை பற்றி நமக்கு தெரியவில்லை / புரியவில்லை என்று அர்த்தம் . 

Friday, July 4, 2014


அக்குபஞ்சர் --- சில நம்பிக்கைகளும் , உண்மைகளும் .


நம்பிக்கை - 1.
அகுபஞ்சரில் எல்லா விதமான நோய்களையும் குணபடுத்த முடியும். 
உண்மை   -1
அகுபஞ்சரில் எல்லா நோய்களையும் குணபடுத்த முடியாது. 100 நபர்கள் சிகிச்சைக்கு வந்தால் அதில் 40 முதல் 50 நபர்களை மட்டுமே குணபடுத்த முடியும். மற்றவர்களுக்கு நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்புகள் இருக்கும் (Endogrine glands) . சிலருக்கு ரெய்கி சக்கர மையங்களில்(Chakkaras) பிரச்னை இருக்கும். இன்னும் சிலருக்கு வர்ம  புள்ளிகளில் பாதிப்பு இருக்கும்.  அதை போன்ற நபர்களுக்கு Acupressure, Reiki, Varma Theraphy, Mudras, Breathing Technique, போன்ற சிகிச்சை முறைகளையும் இணைத்து பயன்படுத்தினால் மட்டுமே குணம் கிடைக்கும் .


நம்பிக்கை - 2.
அகுபஞ்சரில் பக்க விளைவுகள் கிடையாது . 
உண்மை -
பக்க விளைவு என்று கூறுவதை விட சக்தி சம நிலை அற்ற தன்மை என்று கூறலாம் . அதிலும் குறிப்பாக பஞ்சபூத புள்ளிகளை (60 command points) பயன்படுதும் போது நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். பஞ்சபூத புள்ளிகளை தவறாகவோ அல்லது தேவை இல்லாமலோ  பயன் படுத்தினால் அது பல்வேறு உறுப்புகளில் ரத்த ஓட்டம் மற்றும் சக்தி ஓட்டத்தை சமநிலை இல்லாமல் செய்து விடும்  . இதனால் ஏற்படும் பாதிப்புகள் உடனடியாக தெரியாது . சில காலம் கழித்து வேறு உறுப்புகளில் வேறு விதமான பிரச்சினைகள் தோன்றும்.



நம்பிக்கை - 3
அகுபஞ்சரில் stimulator போன்ற ஏலேக்ட்ரோனிக் கருவிகளை பயன்படுத்தலாம் .
உண்மை -
Meridian or channel களில் செல்லும் மின்காந்த சக்தியின் அளவானது மில்லி வோல்ட் என்ற அளவிலேயே இருக்கும். ஆனால் நாம் பயன்படுத்தும் stimulator போன்ற கருவிகளில் மூன்று முதல் பன்னிரண்டு வோல்ட் வரை பயன்படுத்த படுகிறது. இது இயற்கையான அளவை விட பல நூறு மடங்கு அதிகம். எனவே நாடிகளில் இயக்கம் தாறுமாறாக பாதிக்கப்படும்.



நம்பிக்கை - 4
DU-20 என்ற புள்ளியானது எல்லா நோயாளிகளுக்கும் முதலில் பயன்படுத்த வேண்டிய புள்ளி ஆகும்.
உண்மை  - 4
DU-20 என்ற புள்ளியானது யோக முறையில் பிரம்மரந்திரம் என்று அழைக்கபடுகிறது.  இந்த இடத்தின் உட் பகுதியில் PINEAL சுரப்பி அமைந்துள்ளது . மேலும் கொண்டை கொல்லி எனப்படும் மிக மிக முக்கியமான வர்மம் இங்கே அமைந்து உள்ளது . இது TRIPPLE  WARMER ன் DIVERGENT POINT ஆகவும் செயல் படுகிறது  இந்த புள்ளி எல்லாருக்கும் பயன்படுத்த வேண்டியது இல்லை. நான் கடந்த  12 வருடமாக பல ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இருக்கிறேன் . நான் யாருக்கும் DU-20 என்ற புள்ளியை பயன்படுத்தியது இல்லை.இந்த புள்ளி இல்லாமலேயே சிறப்பாக குணமாக்கலாம் .



நம்பிக்கை - 5
இந்த நோயிற்கு இந்த குறிப்பிட்ட புள்ளிகள் என்ற வகையில் அக்குபஞ்சர் புள்ளிகள் பயன்படுத்தபடுகிறது. ( batch points (or) group point (or) Therapeutic points). 
உண்மை -
அகுபஞ்சரின் அடிப்படை நோக்கமே பஞ்சபூத சக்திகளை சமநிலை படுத்துவது ஆகும் . நோய்களுக்கு என்று குறிப்பிட்ட புள்ளிகள் கிடையாது
அவ்வாறு பயன்படுத்தும் போது நோய் முழுமையாக குணமாகாமல் வேறு உறுப்பிற்கு நோயின் தாக்கமானது திசை திருப்ப படுகிறது . இது பின்னால் வேறு ஒரு பிரச்சினையாக வளர்ச்சி பெறுகிறது.  இவ்வாறு பயன்படுத்துவது சரி என்றால், நாடி பரிசோதனை என்ற ஒன்றே தேவை இல்லை என்று ஆகி விடுகிறது .ஆனால் அகுபஞ்சரின் சிறப்பம்சமே நாடி பரிசோதனைதான்.  எனவே நாடி பரிசோதனை செய்து அதற்கேற்ப புள்ளிகளை தேர்வு செய்வதே மிக சிறப்பான பலனை தரும்.



நம்பிக்கை - 6
நாடி பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் . 
உண்மை -

நாடி பரிசோதனையை காலையில் செய்வது நல்லது. நோயாளி எதுவும் சாப்பிடாமல் இருக்கும்போது நாடி பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது . பகலில் , மாலை வேளைகளில் செய்வது துல்லியமான கணிப்பை தராது. ஒரு சோதனை முயற்சியாக , நீங்கள் ஒரு நபருக்கு நாடி பரிசோதனையை காலையில் சாப்பிடாமல் , சாப்பிட பிறகு , மதியம் , மாலை, இரவு என ஐந்து முறை செய்து பாருங்கள். உங்களுக்கே உண்மை விளங்கும்.

எந்த ஒரு நோயிற்கும் அடிப்படையான காரணம், பஞ்ச பூத புள்ளிகளில் ஏதோ ஒரு புள்ளியில் ஏற்பட்ட சக்தி குறைவே  ஆகும் .

Thursday, July 3, 2014

அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு சில கேள்விகள்


அக்குபஞ்சர் மருத்துவர்களே , கீழே கொடுக்கபட்டுள்ள கேள்விகள் அக்குபஞ்சர் மருத்துவத்தின் அடிப்படையான விஷயங்கள். இவைகளுக்கு  பதிலை கண்டறியுங்கள்.


1. பெருங்குடலின் L I-11 என்ற புள்ளி எப்படி நோய் எதிர்ப்பு புள்ளியாக செயல்படுகிறது ?

2. BP மாத்திரைகளை ஒரு நாள் நிறுத்தினாலும் BP அதிகமாவது ஏன் ?

3. GLUCOSE சாப்பிடுவது உடலுக்கு எவ்வாறு தீமையாக முடிகிறது ?

4. K1 என்ற புள்ளி எவ்வாறு அவசரகால புள்ளியாக செயல்படுகிறது ?

5. வாய் புண்கள் உருவாக அக்குபஞ்சரில் கூறப்படும் மிக முக்கிய காரணம் என்ன ?

6. அக்குபஞ்சரில் மட்டுமே BP முழுவதுவமாக குணமாகிறது , பிற மருத்துவங்களில் முழுவதும் குணம் அடைவது இல்லை , அது ஏன் ?

7. காய்ச்சலின் போது உடல் சோர்வு மற்றும் பசியின்மை ஏற்படுவது ஏன்?

8. தலை வலியின் அறிகுறிகளை கொண்டு பாதிக்கப்பட்ட  உறுப்பு எது என்று கண்டறிவது எப்படி ?

9. LUO CONNECTING புள்ளிகளின் பயன் என்ன ?

10. ரத்த ஓட்டம் , மின் சக்தி ஓட்டம் , வெப்ப சக்தி ஓட்டம் ஆகிய வற்றின் முக்கியத்துவம் என்ன ?
11. பரம்பரை நோய் என்பது எவ்வாறு உருவாகிறது ?

12. தசைவலி , எலும்பு வலி , தசைநார் வலி ஆகியவற்றிற்கான காரணங்கள் என்ன?

13. வலிகளின் அறிகுறிகளை கொண்டு பாதிக்கப்பட்ட உறுப்புகளை எவ்வாறு அறிவது ?

14. உடல் முழுதும் தெரியும் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது , சில குறிப்பிட்ட இடங்களில் தெரியும் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது ?

15. இடது முழங்கால் வலி மற்றும் வலது முழங்கால் வலி இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

16. ரெய்கி சக்கர மையங்களுக்கும் அக்கு பஞ்சர் புள்ளிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன ?

17. solar plexus இன் முக்கியத்துவம் என்ன ?

18. மூன்று மட்டங்களில் நடைபெறும் முன்று விதமான சக்தி ஓட்டங்கள் எவை ?

19. xi cleft , yaun source புள்ளிகளின் பயன்கள் என்ன ?

20. பித்தப்பை கற்கள் உருவாக முக்கிய காரணம் என்ன ?


21. அக்குபஞ்சர் ஊசி எவ்வாறு செயல்படுகிறது ?

22. அம்மாவாசை  அன்றோ அல்லது அதனை   ஒட்டியோ கடுமையாக உடல்நலம் பாதித்தவர்கள்  இறந்து போவது ஏன் ?

23.மூன்று மட்டங்களில் நடைபெறும் வேறு வேறு சக்தி ஓட்டங்கள் எவை

24.சாப்பிட்டவுடன் களைப்பாக தெரிவது எந்த நோயின் அறிகுறி ?

25.DIVERGENT POINT களின் உபயோகம் என்ன ?

26.இரண்டு LUO CONNECTING புள்ளிகள் உள்ள உறுப்பு எது ?

27.யின் - யாங்  சக்தி எங்கே உருவாகிறது ?

28.PRIMARY QI என்பதன் சிறப்புகள் என்ன ?

29.நீரிழிவு நோயாளிகள் இனிப்பு சுவையை முற்றிலிமாக நிறுத்தி விடுவது நல்லதா ?

30. WEI QI  என்பதன் பணிகள் என்ன ?

31.வர்ம  சிகிச்சைக்கும் அகுபஞ்சருக்கும் உள்ள தொடர்பு என்ன ?

32.வர்மத்தில் செயல்படும் சக்தி எது ?

இதை போன்ற கேள்விகள் இன்னும் நூற்று கணக்கில் உள்ளன . இதற்குரிய விடைகளை நாம் அறிந்துகொள்ளும்போது
நமக்கு அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆழமான அறிவு கிடைக்கும் .



தொட்டு காட்டாத வித்தை சுட்டு போட்டாலும் வராது. 

Wednesday, July 2, 2014

புதிய அணுகுமுறை - 1


                         ஒரு புதிய அணுகுமுறை        
  
EXIT POINTS.     
    

   சில நேரங்களில் நாம் மிக சிறப்பாக அக்குபஞ்சர் புள்ளிகளை தேர்வு செய்தபோதிலும் , அது சிறப்பான பலன்களை கொடுப்பதில்லை .இதற்கு காரணம் ஒரு குறிப்பிட்ட சக்தி ஓட்ட பாதைகளில் அதிக அளவில் கெட்ட சக்தியானது தேங்கியுள்ளது . அந்த கெட்ட சக்தியை    நீக்கும் புள்ளிகளையும் பிற புள்ளிகளுடன் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலன்  கிடைக்கும். இந்த புள்ளிகளுக்கு EXIT POINTS என பெயர். இந்த புள்ளிகள் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு உள்ளவர்களுக்கு மிகுந்த பயன் தரும்.  உதாரணமாக ஒரு நபருக்கு , வயிறு சக்தி ஒட்ட பாதையானது மிக அதிகமாக இயங்குகிறது . சிறுநீர்பை சக்தி பாதை மிக குறைவான இயக்கம் கொண்டுள்ளது .  இவருக்கு கடுமையான முழங்கால் முட்டுவலி, மற்றும் சிறுநீர் அடிக்கடி  போகிறது. மேலும் அடிக்கடி கடுமையான தலைவலி மற்றும் தலை பாரம்  உள்ளது. இவருக்கு இந்த பிரச்சனைகள் எட்டு வருட காலமாக உள்ளது.   நாடி பரிசோதனை  செய்து இவருக்கு st44, UB66. cv6 ஆகிய இடங்களில் சிகிச்சை   செய்த போதும் பலன் இல்லை . இதற்கு காரணம் வயிறு சக்தி பாதையில்   கெட்ட சக்தியானது அதிக அளவில் தேங்கி உள்ளது . இதை நீக்காத வரையில்  குணம் கிடைப்பது கடினம் .  எனவே இவருக்கு st42 என்ற புள்ளியில் சிகிச்சை தரப்பட்டது. வழக்கம்போல்   st44, UB66, cv6  போன்ற புள்ளிகளிலும் சிகிச்சை தரப்பட்டது .  அடுத்த 3 சிகிச்சைகளில்  நல்ல பலன் கிடைத்தது .  st42  என்ற புள்ளி  வயிறு சக்தி பாதையில் உள்ள  கெட்ட சக்தியை வெளியேற்றிவிட்டது . எனவே பல வருட நோய் நீங்கி சுகம் அடைந்தார்.  அக்குபஞ்சரில் இன்னும் சில வித்தியாசமான அணுகுமுறைகள் உள்ளன.  அவை தொடரும் ...............   


  கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு .

Tuesday, July 1, 2014

ஒரு புதிய அணுகுமுறை - 2

எதிர் அழிக்கும் சுற்று.

நாற்பது வயதுடைய ஒருவர் காலை ஆறு மணிக்கு சிகிச்சைக்கு வந்தார். வரும்போதே மூச்சு இறைத்து நடக்கவே மிகவும் சிரமப்பட்டு வந்தார். நாற்காலியில் அமர்ந்த பின்னர் சிறிது நேரம் கழித்தே இயல்புக்கு வந்தார். அவருக்கு நாடி பரிசோதனை செய்தபோது நுரையீரலில் சக்தி ஓட்டம் மிகவும் குறைவாக இருந்தது. பெருங்குடலில் சக்தி ஓட்டம் இல்லாமலும் இருந்தது. அதே சமயம் மரம் மூலபொருளில் மிக அதிக சக்தி ஓட்டம் இருந்தது. சாதாரணமாக காற்று மூலபொருளின் இயக்கம்தான் மரம் மூலபொருளை பாதிக்கும். ஆனால் இங்கே அதற்கு எதிர்மறையாக இருந்தது. இதற்கு பெயர்தான் எதிர் அழிக்கும் சுற்று. இந்த மாதிரியான நபர்களுக்கு காலை வேளையில் ஆஸ்துமா மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக காலை இரண்டு மணியில் இருந்து காலை ஏழு மணி வரை இந்த ஆஸ்துமா இருக்கும். பிறகு இயல்பு நிலைக்கு வந்துவிடும் . இதற்கு காரணம் மரம் மூலபொருளின் இயக்கம் காற்று மூலபொருளின் இயக்கத்தை தடுத்துக்கொண்டு உள்ளதுதான் காரணமாகும். இதற்கு சாதாரணமாக ஆஸ்துமாவிற்கு பயன்படும் புள்ளிகளான LU9, LU1, LU11 போன்ற புள்ளிகள் பயன்படாது. இதற்கு நான் பயன்படுத்திய புள்ளி LIV4 மற்றும் CV9, LU8 ஆகிய மூன்று புள்ளிகள் மட்டுமே. இதை போன்று எல்லா மூலபொருளுக்கும் எதிர் அழிக்கும் சுற்று உள்ளது. இது இயல்பான அழிக்கும் சுற்றுக்கு எதிரிடையாக செயல்படும். சில நபர்களுக்கு இந்த வகை சிகிச்சை மட்டுமே பலன் கொடுக்கும்.

உங்கள் எண்ணத்தின் வலிமையையும், சக்தியும் அக்குபஞ்சர் ஊசி வழியாக பஞ்சபூத சக்தியுடன் கலந்து நோயை  குணமாக்க செய்கிறது . 


அகுபஞ்சரில் முழுமையான தெளிவும், தீர்கமான சிந்தனையும் ,  ஆழமான அறிவும் இருந்தால் மட்டுமே உங்களால் எந்த ஒரு நோயாளியையும் முழுமையாக குணப்படுத்த  முடியும்.